Directorate of Medical and Rural Health Services

DMS Complex, No 359-361, Anna Salai, Chennai - 600 006

தமிழ் / English

குடிமக்கள் உரிமை சாசன கையேடு

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககமானது மருத்துவ துறையின் அடிப்படை அலகாகும். பொது மக்களின் மருத்துவ சேவை தேவைகளை கருத்தில் கொண்டு அதனை நிறைவு செய்வதற்கு ஏதுவாக இத்துறையிலிருந்து பிற இயக்குநரகங்கள் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பின் இரண்டாம் நிலையில் செயல்படும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சுமார் 96 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடைய அடிப்படை அலகாக அமைந்துள்ளது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் மக்களின் பல்வேறு விதமான சிறப்பு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக தேவையான மாற்றங்களுடன் தரம் உயர்த்தப்பட்டு பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்குவதில் முதன்மை அலகாக திகழ்கிறது. மேலும் மகப்பேறு மற்றும் குழந்தை நல்வாழ்வினை மேம்படுத்துவதை முக்கியத்துவமாக கொண்டு 93 அரசு மருத்துவமனைகளில் (அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு உட்பட) ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்கள், 110 அரசு மருத்துவமனைகளில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் (NBSU) மற்றும் 49 அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (SNCU) ஆகியவை இவ்வியக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இதனைத் தவிர, மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பால்வினை நோயியல், எலும்பு முறிவு, மயக்கவியல், குழந்தை நலம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், அவசரகால ஊர்தி சேவை, ஆய்வுக்கூட சேவை, தொழு நோய், காசநோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தொற்றா நோய் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் உயர்தொழில் நுட்ப கருவிகள் கொண்டும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகள், குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நல சேவைகள்,காசநோய் கட்டுப்பாடு மற்றும் பார்வை இழப்பு கட்டுப்பாடு திட்டம்,தமிழ்நாடு நோயாளர் நல உதவி சங்கம், மாவட்ட மனநலத் திட்டம் போன்ற சேவைகளைக் கொண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

I. இவ்வியக்குநரகத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் குறிக்கோள்

‘நலமே வளம்’. இவ்வாசகத்தின் படி சிறப்பான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதே இவ்வியக்குநரகத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் குறிக்கோளுக்கான அடிப்படையாகும்.

தொலைநோக்கு பார்வை

  • மருத்துவமனையின் தரத்தினை ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பின் ஒப்புதலை பெறும் அளவிற்கு உயர்த்துதல் மூலம் (தேசிய தர நிர்ணய அமைப்பு) இம்மாநிலத்தில் இவ்வியக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளை, குடிமக்கள் மனதிற்குகந்த உயரிய தரமான மருத்துவ சேவையகமாக தெரிவு செய்யக் கூடியதாக திகழ்வது.

குறிக்கோள்

  • தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆயுட்காலம் அதிகரித்தல் ஆகியவற்றால் அவர்கள் மிக உயர்ந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடைந்து, 2023 ஆம் ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிக்க செய்தல்.

இக்குறிக்கோளை அடைவதற்கு சிறப்பான நடவடிக்கைகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படுகின்றன:

  • தரமான மருத்துவ சேவையை வழங்குதல்.
  • நோய்தடுப்பு மற்றும் நோய் நீக்கும் சிகிச்சை வழங்குதல்
  • கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தேர்வை தடை செய்தல்) சட்டம், 1994 ஐ நடைமுறைப்படுத்துதல் மூலம் குழந்தை பாலின விகிதாசாரத்தை மேம்படுத்துதல்.
  • டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்துதல்.
  • தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல்.
  • எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி கட்டுப்படுத்துதல்
  • பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்தல்
  • கருவுற்ற தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தல்
  • மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல்
  • மருத்துவ முகாமைத்துவ சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல்.
  • மாநிலத்தில் சுகாதாரம் தொடர்பான ஒழுங்கு முறை ஆணைகளை முறையாக அமல்படுத்துதல்.( PCPNDT, HOTA, Clinical Establishment Act)
  • மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் மக்களின் மனநலனை மேம்படுத்துல்
  • இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
  • இந்திய மருத்துவ துறை இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து மாவட்ட மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் ஆயுஷ் திட்டத்தினை செயல்படுத்துதல்.
  • போதை மறுவாழ்வு மையம்
  • போலி மருத்துவர்களை ஒழித்தல்

II. இவ்வியக்குநரகத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்

  • இவ்வியக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இத்துறையானது பின்வரும் மருத்துவமனைகளின் மூலம் பொது மக்களுக்கு இரண்டாம் நிலை சிகிச்சைகளை வழங்குவதற்கான பொறுப்புடன் செயல்படுகிறது.
  •   மாவட்ட தலைமை மருத்துவமனைகள்

      36

      வட்ட மருத்துவமனைகள்

      198

      Non வட்டம் சாரா மருத்துவமனைகள்

      58 *

      மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள்

      7

      காசநோய் மருத்துவமனைகள்

      2

      தொழுநோய் மருத்துவமனைகள்

      6

      மறுவாழ்வு மற்றும் புரணமைப்பு மனநலம் காப்பகம்

      1

      மருந்தகங்கள்

      11

      மொத்தம்

      319

  • *நீலகிரி மாவட்டம் எமரால்டில் புதிதாக 1 வட்டம் சாரா மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

மேற்படி மருத்துவமனைகளின் செயல்பாடுகள்

      வெளிநோயாளிகள் நாளொன்றுக்கு

      2.53 இலட்சம்

      உள் நோயாளிகள் நாளொன்றுக்கு

      23523

      பிரசவம் மாதமொன்றுக்கு

      16105

      அறுவை சிகிச்சை பிரசவம் மாதமொன்றுக்கு

      7966

      பெரிய வகை அறுவை சிகிச்சை மாதமொன்றுக்கு

      46000

      சிறிய வகை அறுவை சிகிச்சை மாதமொன்றுக்கு

      1.3 இலட்சம்

      இரத்த சுத்தீகரிப்பு மாதமொன்றுக்கு

      6840

      சிடி ஸ்கேன் மாதமொன்றுக்கு

      20545

      இரத்த சேகரிப்பு மாதமொன்றுக்கு

      9543

      இரத்த மாற்றம் மாதமொன்றுக்கு

      8502

  • வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை தவிர இந்த மருத்துவமனைகள் பின்வரும் கூடுதல் சேவைகளை வழங்குகின்றன.

மாவட்ட தலைமை மருத்துவமனைகள்:

  • முழுமையான ஆய்வகம்
  • யுஎஸ்ஜி ஸ்கேன்
  • நுண்கதிர் வீச்சு கருவி மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே
  • சி-ஆர்ம் ஆர்த்தோ டேபிள்
  • இசிஜி
  • வென்டிலேட்டர்
  • நவீன அறுவை அரங்கம்
  • ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்கள்
  • எக்கோ கார்டியோகிராமுடன் கூடிய தீவிர சிகிச்சை மையம்
  • விஷமுறிவு சிகிச்சை மையம்
  • இரத்த பகுப்பாய்வு மையம்
  • இரத்த வங்கி மற்றும் இரத்த சேமிப்பு நிலையம்
  • எம்ஆர்ஐ ஸ்கேன்
  • சிடி ஸ்கேன்
  • மேமோகிராம்
  • டையாலிசிஸ் யூனிட்

வட்ட மருத்துவமனைகள்

  • முழுமையான ஆய்வகம்
  • யுஎஸ்ஜி ஸ்கேன்
  • நுண்கதிர் வீச்சு கருவி மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே
  • சி-ஆர்ம் ஆர்த்தோ டேபிள்
  • இசிஜி
  • அறுவை அரங்கம்
  • ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்கள் (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • விஷமுறிவு சிகிச்சை மையம் (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • இரத்த வங்கி மற்றும் இரத்த சேமிப்பு நிலையம் (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • டையாலிசிஸ் யூனிட் (சில மருத்துவமனைகளில் மட்டும்)

வட்டம் சாரா மருத்துவமனைகள்

  • முழுமையான ஆய்வகம்
  • யுஎஸ்ஜி ஸ்கேன்
  • நுண்கதிர் வீச்சு கருவி
  • அறுவை அரங்கம் (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • இசிஜி

மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளில் உள்ள சீமாங் பிரிவில் உயர் ஆபத்தில் உள்ள தாய்மார்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவங்கள் மகப்பேறுக்கு பின்னான உயர் சிகிச்சை, பச்சிளங் குழந்தைகளை பராமரித்தல், நோயுற்ற பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை, பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், முதியோர் நலனுக்கான சிகிச்சை மற்றும் தேவையான நோயாளிகளுக்கு போதை மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட வசதிகளைக் கொண்டு வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளிலும் தேவையான நோய் கண்டறிதல் ஆய்வுகள் செய்யப்பட்டு உயர் தரமான சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மூன்றாம் நிலை சிகிச்சை வழங்கக் கூடிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

III. குடிமக்கள் அல்லது பயனாளிகளின் விவரம்

  • தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களுமே பயனாளிகள் ஆவார். தமிழகத்தை தவிரவும் நாட்டின் பிற மாநிலங்களில் வசிக்கும் மற்றும் பிற நாட்டில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் இவ்வியக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாம் நிலை மருத்துவ நிலையங்களில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பொது மக்களும் பயனாளிகளே.

IV. வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் விவரம் குறிப்பிட்ட காலகெடு மற்றும் வழங்கப்படும் குடிமக்கள் / பயனாளிகளின் விவரம் மற்றும் எங்கு /எவ்வாறு சேவையை பெறுவது

  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக இரண்டாம் நிலை மருத்துவ சிகிச்சையுடன்,திருத்திய காசநோய் திட்டம், மாவட்ட மனநல திட்டம், விபத்து மற்றும் அவசர சேவை, தலைக்காய சிகிச்சை, தொழில்சார் சமூக சுற்றுச்சூழல் சுகாதார பிரிவு ஆகியவற்றின் மூலம் பல்வேறு சுகாதார சேவைகளை செய்து வருகிறது. மேலும், மாநிலத்தில் சுகாதாரம் தொடர்பான ஒழுங்கு முறை ஆணைகள் முறையே கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தேர்வை தடை செய்தல்) சட்டம், 1994, மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994, தமிழ்நாடு மருத்துவ முகாமைத்துவ சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசு தலைமை மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள்

  • பொது மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை.
    • ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) சிகிச்சை.
    • குழந்தைகளுக்கான சிகிச்சை
    • தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான சேவை.

சிறப்பு சேவைகள்

  • காது மூக்கு தொண்டை சிகிச்சை
  • கண் சிகிச்சை
  • எலும்பு சிகிச்சை
  • குழந்தைகளுக்கான சிகிச்சை
  • பல் சிகிச்சை
  • தோல் சிகிச்சை
  • மனநல திட்டம்
  • ஆர்என்டிசிபி
  • ஐசிடிசி
  • தொற்றாநோய் சிகிச்சை
  • தொழுநோய் சிகிச்சை
  • வலி மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு சிகிச்சை
  • பகல் நேர கீமோதெரபி
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சை
  • தலைக்காய சிகிச்சை (சில மருத்துவமனைகளில் மட்டும்)

வட்ட மருத்துவமனைகள்

  • பொது மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை.
  • மகப்பேறுக்கான சிகிச்சை
  • குழந்தைகளுக்கான சிகிச்சை
  • பல் சிகிச்சை
  • தொற்றா நோய்களுக்கான சிகிச்சை
  • எலும்பு முறிவுக்கான சிகிச்சை (சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • காது மூக்கு தொண்டைக்கான சிகிச்சை(சில மருத்துவமனைகளில் மட்டும்)
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சை /தலைக்காய சிகிச்சை (சில மருத்துவமனைகளில் மட்டும்)

வட்டம் சாரா மருத்துவமனைகள்

  • பொது மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை.
  • மகப்பேறுக்கான சிகிச்சை
  • குழந்தைகளுக்கான சிகிச்சை
  • அவசர கால சிகிச்சை

சிகிச்சை அளிக்கும் நேரம்

  • அனைத்து அவசர சிகிச்சைகளும் 24x7
  • வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை
    • காலை – 7.30 முப முதல் 12.00 நப அனைத்து நாட்களும்
    • மாலை – 3.00 பிப முதல் 5.00 பிப (அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமை தவிர)
  • பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் 24x7
  • உள் நோயாளிகள் சிகிச்சை 24X7
  • பிரசவ சிகிச்சை 24X7
  • மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆய்வக வசதி 24X7 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் – வெளிநோயாளிகள் சிகிச்சை நேரங்களில் மட்டும்.
  • நோய் கண்டறிதலுக்கான ஆய்வுகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24X7 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் – வெளிநோயாளிகள் சிகிச்சை நேரங்களில் மட்டும்.

V. குறைகள் நிவர்த்தி மற்றும் அதை எவ்வாறு அணுகுவது போன்ற விவரங்கள்

  • ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகளில் குடிமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகிறது.
  • 104/108 தொலைபேசி அழைப்பு மூலம் பெறப்படும் புகார்களுக்கு போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அம்மா அழைப்பு மையம் மூலமும் இவ்வியக்குநரகத்திலும், இவ்வியக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் புகார்கள் பெறப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.
  • மருத்துவ சிகிச்சையும் தவறு ஏற்பட்டதாகவோ, மகப்பேறு இறப்பு போன்ற புகார்கள் பெறப்பட்டு தவறு கண்டறியப்பட்டால் நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி இயக்குநர் அளவில் துறைரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

VI. குடிமக்கள் அல்லது பயனாளிகளின் எதிர்பார்ப்பு

  • குடியிருப்பு அருகாமையிலே தரமான மருத்துவ சேவை என்பதே குடிமக்கள் அல்லது பயனாளிகளின் எதிர்பார்ப்பாகும்.
  • குடிமக்கள் அல்லது பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, டையாலிசிஸ் மற்றும் மேமோகிராம் போன்ற நவீன மருத்துவக் கருவிகள், விசாலமான படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய பிரிவுகள், கட்டுமான வசதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குள் சிறப்பான சுகாதார வசதி ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறது.
  • மேலும், சிறப்பு சிகிச்சைகளான தலைக்காய சிகிச்சை, மனநல சிகிச்சை, போதை மறுவாழ்வு சிகிச்சை, முதியோர் நலனுக்கான சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை, டையாலிசிஸ் போன்ற சிகிச்சை வசதிகள் இவ்வியக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் செய்யப்பட்டு உள்ளது. மேற்காணும் சிகிச்சைகள் தேவையின் அடிப்படையில் பிற இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

VII. மேற்படி சேவைகளில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு போன்ற கூடுதல் கடமைகள்

  • மேற்படி சேவைகளில் ஏதேனும் தவறு நிகழ்ந்து அது நிரூபிக்கப்பட்டால் உரிய நீதிமன்ற ஆணைப்படி / அரசாணைப்படி கார்ப்பஸ் நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்காக.